கேரள அரசின் தடுப்பணை கட்டும் கருத்துருவை சுற்றுச்சூழல் நிபுணர் குழு நிராகரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: தடுப்பணை கட்டும் கேரள அரசின் கருத்துருவை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு நிராகரிக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு, கேரள அரசின் சார்பில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதனை, இன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பிட்டுக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானதாகும்.

எனவே, கேரள அரசும், மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவும் இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் தமிழகத்தின் பாசன உரிமையை பாதிக்கும் என்பதோடு இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து சட்ட ரீதியான மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதை மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வரவேற்கிறது.

 

The post கேரள அரசின் தடுப்பணை கட்டும் கருத்துருவை சுற்றுச்சூழல் நிபுணர் குழு நிராகரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: