27ம் தேதி திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: திமுக ஆதி திராவிட நலக்குழு மாநில செயலாளரும், பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழக ஆதி திராவிடர் நலக்குழுவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் வருகின்ற 27ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், திமுக ஆதிதிராவிடர் நலக் குழுவின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.  எனவே ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

The post 27ம் தேதி திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: