நீலகிரி மாவட்டதில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி தொடங்கியது

குன்னூர்: கோடை விழாவின் ஒரு பகுதியாக சிம்ஸ் பூங்காவில் இன்று பழக்கண்காட்சி தொடங்கியது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, இன்று சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சியை தொடங்கி வைத்தார். 150 ஆண்டு வரலாறு கொண்ட சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கும் பழக்கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்கா உருவாகி 150 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, மரங்களை பற்றி அறிந்து கொள்ள க்யூ.ஆர். போர்டு வைக்கப்பட்டது. குன்னூர் சிம்ஸ் பூங்கா மரங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூ.ஆர்.போர்டை ஸ்கேன் செய்து மரங்களின் விவரம் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டதில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: