மலைகாய்கறி தோட்டத்திற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்தது: கேரட், பூண்டு பயிர்கள் சேதம்


கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள மசகல் பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறு தூர்வாரப்படாததால் தற்போது மசகல் பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் மலைப்பூண்டு,முட்டைகோஸ்,கேரட்,புரூக்கோளி போன்ற மலைக்காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மசகல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் இப்பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கு மேல் மலைக் காய்கறிகளான முட்டைகோஸ்,கேரட், புரூக்கோளி,மலைப்பூண்டு,பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. மேற்கண்ட விவசாய நிலங்களுக்கு தீனட்டி மலைப்பகுதியில் இருந்து மசகல் பகுதி நோக்கி செல்லும் ஆற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறப்படுகிறது.

அவ்வாறு வரக்கூடிய ஆற்று நீரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட ஆறினை சுமார் எட்டு ஆண்டுக்கு மேலாக தூர் வாரப்படவில்லை.ஆறு தூர்வாரப் படாததால் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்தன. இதில் சுமார் 20 இலட்சம் மதிப்பிலான மலைப்பூண்டு,முட்டைகோஸ்,புருக்கோளி,கேரட் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே விவசாயிகளின் நலன் கருதி போர்கால அடிப்படையில் மசகல் ஆற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post மலைகாய்கறி தோட்டத்திற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்தது: கேரட், பூண்டு பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: