×

திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது

ஜெயங்கொண்டம், மே 24: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிசல் மேலத்தெருவை சேர்ந்த நாகராஜன்(65) என்பவர் தேளூர் ஜி கே எம் நகர் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நாகராஜனை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Ariyalur District Kairlababad Police ,Sub-Inspector ,Samithurai ,Nagarajan ,Kudisal ,Meletheru ,Telur ,GKM Nagar ,Tasmac ,
× RELATED பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல்...