×

பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு

பாடாலூர், மே19: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் நல்லேந்திரன் (38). இவர், பாடாலூரில் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை நல்லேந்திரன் கடையை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 25 கீ போர்டு செல்போன்கள், 10 ஆண்ட்ராய்டு செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் நல்லேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Padalur ,Badalur ,Kamaraj son Nallendran ,Kouthanur ,Aladhur taluka ,Perambalur district ,Trichy ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் பாடாலூரில்...