×

மேலும் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கைவிட கூறிய மனைவியை தாக்கிய டிரைவர்

பண்ருட்டி, மே 18: பண்ருட்டி அருகே உள்ள சொரத்தங்குழி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(34). கார் டிரைவர். இவரது மனைவி கமலா(28). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிய நிலையில், குழந்தை இல்லை. இந்நிலையில் குணசேகரனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த கமலா, குணசேகரனை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் கணவரிடம் கோபித்துக்கொண்டு கமலா, அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் சில தினங்கள் கழித்து குணசேகரன் சமாதானப்படுத்தி அவரது மனைவியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனிடையே கள்ளத்தொடர்பை கைவிடுமாறு தனது கணவரிடம் கமலா கூறினார். இதில் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் ஆபாசமாக திட்டி, இரும்பு கம்பியால் மனைவி கமலாவின் தலையில் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கமலா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குணசேகரனை தேடி வருகின்றனர். ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேலும் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கைவிட கூறிய மனைவியை தாக்கிய டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Vrudhachalam ,Deputy Superintendent ,Panruti ,Gunasekaran ,Sorathanguzhi ,Kamala ,Vriddhachalam ,Deputy Superintendent of Police ,Dinakaran ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் தற்கொலை முயற்சி