×

செங்கல்பட்டில் கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படை தலைவர்கள் இருவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சரித்திர பதிவு குற்றவாளிகள், கொலை வழக்ககில் தொடர்புடைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு காவல் துணை காண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள ரவுடிகளை கடந்த சில மாதங்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு கொளவாய் ஏரி பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த படகு குழுமத்தில் ரவுடிகள் இருப்பதாக செங்கல்பட்டு தனிப்படை போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக செங்கல்பட்டு கொளவாய் ஏரிக்கு விரைந்த தனிப்படை போலீசார் கூலிப்படை தலைவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது முதல் மாடியில் இருந்து போரீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற போது இருவருக்கு கால் உடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதான இருவர் செங்கல்பட்டு நகரை நகரை சேர்ந்த கூலி படை தலைவன் அன்வர் மற்றும் செங்கல்பட்டு அருகே காவூர் பகுதியை சேர்ந்த விஜி என தெரியவந்தது.

இந்த கூலிப்படை தலைவன்கள் பிரபல ரவுடிகள் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு ரவுடிகள் மீது தலா நான்கு கொலை வழக்கும் மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல் என இருவர் மீது தலா பத்து வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். கைதான பிரபல ரவுடிகள் அன்வர் மற்றும் விஜி ஆகிய இருவர்கள் மீது போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு பகுதியில் பல ரவுடிகள் இருந்தாலும் தற்போது அன்வர் மற்றும் விஜி இருவர் தான் தற்போது கூலிப்படை தெலைவனாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இருவர் தலைமையில் தான் கொலை சம்பவம் அறங்கேரி வருகின்றது கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் பாமக நிர்வாகி நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தது அன்வர் மற்றும் விஜி ஆகியோர் நான் நாகராஜ் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சில மாதங்களுக்கு முன்பு ஜாமிலில் வெளிவந்த அன்வர், விஜி இருவரும் காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தபடியே தொலைபேசியில் பலரை கொலை மிரட்டல் விடுத்து வந்தனர் குறிப்படதக்கது

செங்கல்பட்டில் கொலை செய்ய திட்டம் தீட்டிய தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டில் கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படை தலைவர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu District Police ,Superintendent ,Chai ,Chengalpattu district ,Praneet ,Deputy Superintendent ,Chengalpattu Police Puzhenthi ,Dinakaran ,
× RELATED வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க...