×

14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த ராயின் சொத்து ₹15.45 கோடி: பிரமாண பத்திரத்தில் தகவல்

பாட்னா: பீகாரின் உஜியார்பூர் தொகுதியில் பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான நித்யானந்த ராய் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் அலோக் மேத்தா களம் காண்கிறார். இதையடுத்து நித்யானந்த ராய் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அத்துடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், “ரூ.5.52 கோடி அசையும் சொத்துகள், ரூ.9.92 கோடி அசையா சொத்துகள் உள்ளன. மேலும் ராய் கையில் ரூ.3.25 லட்சம் ரொக்கப் பணம், நான்கு வங்கி கணக்குகள், ரூ.13.20 லட்சம் மதிப்பில் தங்க நகைகள் உள்ளன. ராயின் அசையா சொத்துகளில் 2,704 ஷீஷம், 1,831 மஹோகனி மற்றும் 105 மா, லிச்சி மரங்கள் கொண்ட மூதாதையரின் சொத்துகளும் அடங்கும். மேலும் 14 பசுக்கள், 12 எருமைகளுடன் பால் பண்ணை தொழிலும் செய்து வருகிறார். ராயின் 2022-23ம் ஆண்டுக்கான வருமானம் ரூ.11,51,530.

நித்யானந்த ராய் மனைவி அமிர்தா ராயின் அசையும் சொத்து ரூ.42.9 லட்சம். அசையா சொத்து ரூ.2.04 கோடி. அவர் கையில் ரூ.1.35 லட்சம் ரொக்கப் பணம். ஒரு வங்கி கணக்கு. ரூ.21.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.1.23 லட்சம் மதிப்பில் வௌ்ளி நகைகள்” உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த ராயின் சொத்து ₹15.45 கோடி: பிரமாண பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nithyananda Roy ,Patna ,BJP ,Nithyananda Rai ,Bihar ,Ujiarpur ,Rashtriya Janata ,Alok Mehta ,Nityananda Rai ,District Election Officer ,Dinakaran ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...