×

போர்க்காலத்தில் பாட்டி நகைகளை நாட்டுக்கு ெகாடுத்தார் என் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி

சித்ரதுர்கா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:
பிரதமர் மோடியின் அரசில் பொய்கள் நிரம்பி வழிகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சட்டவிரோதச் செயல்களின் மூலம் கவிழ்க்கும்போது, அதை ஊடகங்கள் மோடியின் அதிரடி தாக்குதல் என்று வர்ணிக்கின்றன. பாஜவின் இந்த செயலைக் கண்டிக்க யாரும் முன்வருவதில்லை.

நாட்டு மக்களின் சொத்துகளைப் பறித்து, முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தரம் தாழ்ந்து பொய் பிரசாரம் செய்கின்றனர். நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. எப்போதாவது பெண்களின் ‘மாங்கல்யத்தையோ’, நகைகளையோ காங்கிரஸ் பறித்ததா? போர் காலத்தில், எனது பாட்டி இந்திரா காந்தி, தனது தங்க நகைகளை நாட்டுக்கு நன்கொடையாக அளித்தார். எனது தாயாரோ, நாட்டுக்காக தனது ‘மாங்கல்யத்தையே’ தியாகம் செய்தார்.மாங்கல்யத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்திருந்தால், இப்படி பேசியிருக்க மாட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பெண்களின் சேமிப்பை பறித்தார்.

விவசாயிகள் போராட்டத்தின் போது, 600 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் மனைவிகளின் மாங்கல்யம் பறிபோனது பற்றி மோடி பேசுவாரா? பாஜவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் அனுபவித்த கஷ்டங்கள் அக்கட்சியினருக்கு தெரியவில்லை. இப்போது தேர்தல் நேரத்தில், பெண்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற நினைக்கின்றனர். இது வெட்கக் கேடானது’ என்றார்.

The post போர்க்காலத்தில் பாட்டி நகைகளை நாட்டுக்கு ெகாடுத்தார் என் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி appeared first on Dinakaran.

Tags : Priyanka ,PM Modi ,Chitradurga ,general secretary ,Priyanka Gandhi ,Congress ,Chitradurga, Karnataka ,Modi ,
× RELATED 10 ஆண்டுகளில் மக்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி பேச்சு