மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனைவி விசுவாசம் மீது கணவர் வரபிரசாதம் சந்தேகபட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 19.10.2022 அன்று நள்ளிரவில் மனைவி விசுவாசம் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது கணவர் வரபிரசாதம் கத்தியால் மனைவி கழுத்தை வெட்டி தலைகாணியை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது தாயை கொலை செய்தது குறித்து மகள் ஆனந்தி (28) கொடுத்த புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் வரபிரசாதத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழங்கு நடைபெற்று வந்தது அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சிசிரேகா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி குற்றவாளி வரபிரசாதத்திற்க்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழக்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து குற்றவாளி வரபிராசதத்தை போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

The post மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: