திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ரூ.70.3 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ரூ.70.3 லட்சம் காணிக்கையாக கிடைக்க பெற்றுள்ளன. உண்டியல் எண்ணப்பட்டதில் 125 கிராம் தங்கம், 775 கிராம் வெள்ளி, 280 வெளிநாட்டு பணம் கிடைத்தது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் நடைபெற்றது.108 வைணத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகிறது.

இங்கு திருச்சி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கோயிலில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் திறந்து பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் கணக்கிடப்படும்.

நேற்று சித்ரா பௌர்ணமி என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் உண்டியலில் இருக்கும் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. இந்த பணியில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணி நடந்து முடிந்த நிலையில் ரூ.70.3 லட்சம் ரொக்கம் 125 கிராம் தங்கம், 775 கிராம் வெள்ளி, 280 வெளிநாட்டு பணம் கிடைத்தது.

The post திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ரூ.70.3 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: