5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரிப்பு சந்திரபாபுநாயுடு சொத்து ரூ.810 கோடியாக உயர்வு

அமராவதி: ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து ரூ.810 கோடியாக உயர்ந்துள்ளது. ஆந்திர சட்டப்பேரவைக்கு மே 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குப்பம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சார்பில் அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து ரூ.810.42 கோடியாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டில், சந்திரபாபுநாயுடுவின் குடும்பம் ரூ. 574.3 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வைத்து இருந்தது. இதுதவிர சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி 3.4 கிலோ தங்கமும், 41.5 கிலோ வெள்ளியும் வைத்துள்ளார்.குடும்பத்தின் மொத்த கடன்கள் ரூ.10 கோடிக்கு மேல் உள்ளது. 24 எப்ஐஆர்களில் சந்திரபாபுநாயுடுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது .

The post 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரிப்பு சந்திரபாபுநாயுடு சொத்து ரூ.810 கோடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: