தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி


ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் வாக்குச்சாவடி மையம் எண் 272ல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த 2 முறை நடந்த தேர்தலை காட்டிலும் இந்தமுறை 2 மடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். இது கட்சிகள் நடத்தும் தேர்தல் இல்லை. இந்திய தேசத்தை காப்பதற்கும், நமது மண்ணை பாதுகாப்பதற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வலிமை பெற்று பாதுகாப்பதற்கு மக்களே நடத்துகின்ற தேர்தல். இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும், ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும்.

நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். மோடி வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பி தேர்தலை சந்திக்கிறார். இதுதான் அவருக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் அனைவரும் விழிப்போடு இருக்கிறோம். மேலும் வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள், வழக்கறிஞர்கள் உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர். ஏதேனும் தவறு நடக்கும்பட்சத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உள்ளோம். மோடியினுடைய மேஜிக் வேலை, திருத்தம் செய்வது மாற்றம் செய்வதுதான்.

The post தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: