×

நின்றிருந்த லாரி மீது கார் மோதி கடலூர் அரசு டாக்டர் படுகாயம்

பாகூர், ஏப். 17: புதுச்சேரி காமராஜர் நகர் வாணிதாசனார் வீதியை சேர்ந்தவர் தங்கமணி (38). இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு, காரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கொருக்குமேடு சந்திப்பில் வாகன சோதனை நடந்ததால் அங்கு கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி நோக்கி சென்ற தங்கமணியின் கார் எதிர்பாராத விதமாக அங்கு நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதமான நிலையில் டாக்டர் தங்கமணி இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டார். பொதுமக்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post நின்றிருந்த லாரி மீது கார் மோதி கடலூர் அரசு டாக்டர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Govt. ,Dr. ,Padukayam ,Bagur ,Thangamani ,Vanidasanar Road, Puducherry Kamaraj Nagar ,Cuddalore Government Hospital ,Puducherry ,Korukumedu Junction ,Doctor ,
× RELATED டூர் போறீங்களா?