ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை ஓட்டேரி செல்லப்பா தெருவில் இருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரிக்ளின் ரோடு, நாராயண மேஸ்திரி தெரு, வள்ளுவன் தெரு, ஜமாலியா, மேட்டுப்பாளையம், எஸ்.எஸ்.புரம், எஸ்.வி.எம்.நகர் ஹவுசிங் போர்டு, சந்தியப்பன் தெரு, பராக்கா ரோடு, சுப்புராயன் மெயின் தெரு, சங்கர பத்தன் தெரு, ஹைதர் கார்டன், டிகாஸ்டர் ரோடு, சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர் சத்தியவாணி முத்துநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். குறிப்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னை காலங்காலமாக இருந்து வருவதாகவும் கண்டிப்பாக அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

ஓட்டேரியில் பல பகுதிகளில் மழைநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை எனவும் அந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் மேலும் குறுகலாக உள்ள இடங்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்க வழிவகை செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திருவிக நகர் மேற்கு பகுதி செயலாளர் முகுந்தன், வட்ட செயலாளர் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், அதிமுகவினர் பெரும்பளவில் கலந்து கொண்டனர்.

The post ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: