×

வாக்குச்சாடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்

சேலம், ஏப்.15: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், வாக்குச்சாடிகளுக்கான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் 19ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் முத்திரைகள், பென்சில்கள், பேனாக்கள், A4 தாள்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட 34 வகையான பொருட்கள், சென்னையில் இருந்து வரப்பெற்று ஏற்கனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் தனியாக பொருட்களை பிரித்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அத்துடன், வாக்குச்சாவடிகளில் ஒட்டவேண்டிய வேட்பாளர் விவரம், வழிகாட்டி தகவல்கள் அடங்கிய போஸ்டர்கள், பாதுகாப்பு அட்டைகள் உள்ளிட்டவை வரவுள்ளது. இவை முழுமையாக வந்தவுடன், தனித்தனியாக பிரித்து வைக்கப்படும். பின்னர் தேர்தலுக்கு முதல்நாள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வாக்குச்சாடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...