சித்திரை மாத சிறப்புகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும் பங்குனியை ‘கடை மாதம்’ என்றும் சொல்வது வழக்கம். பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.

*சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது. சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.

*சித்திரை திருவிழா என்றாலே மதுரை மீனாட்சி அம்மன் திருவிழாதான். இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் போன்ற விழாக்கள் நடைெபறுவது வழக்கம்.

* சித்திரை மாதத்தில் வரக்கூடிய “சித்ரா பெளர்ணமி” மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும். அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

*எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது பல மடங்கு பலன் தரக்கூடிய நாளாக விளங்குவது அட்சய திருதியை. இந்த நன்னாள் சித்திரை மாதத்தில்தான் வருகிறது. இந்த தினத்தில் அரிசி, கோதுமை, தானியங்கள், பழங்கள், தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்.

*சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடப்பது வழக்கம்.

– எஸ்.நிரஞ்சனி, சென்னை.

The post சித்திரை மாத சிறப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: