காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!

காரைக்குடி: காரைக்குடியில் நாளை நடக்க இருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒன்றிய உளதுறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

இந்நிலையில் நாளை நடக்க இருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா ரோடு ஷோவில் பங்கேற்க இருந்தார். சென்னையில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்று விமர்சனம் எழுந்தது.

பாஜகவின் ரோடு ஷோவுக்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு இல்லை என கூறப்படும் நிலையில் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது. பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று புகார் செய்துள்ளது. போதிய வரவேற்பு இல்லாததாலும் பாஜக வேட்பாளர் மீதான மோசடி புகாராலும் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது.

The post காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து! appeared first on Dinakaran.

Related Stories: