கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்

ஈரோடு, ஏப். 6: கீழ்பவானி வாய்க்காலில் வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுத்து லாரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் அடுத்த சுற்றுக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் வாய்க்கால்மேடு என்ற இடத்தில் வணிக நோக்கத்திற்காக வாய்க்கால் அருகில் கிணறு வெட்டி அதில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், உதயகுமார் உள்ளிட்டோர் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்ததோடு லாரியையும் பறிமுதல் செய்து பின்னர் விடுவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: