×

40 தொகுதிகளிலும் பாஜவுக்கு நமுத்து போன பிஸ்கெட் நிச்சயம் கிடைக்கும்… நடிகை விந்தியா அதிமுக நட்சத்திர பேச்சாளர்

1 அதிமுக வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறீர்கள்? இந்த தேர்தல் அதிமுகவுக்கான களமாக அமையுமா? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். எங்கு சென்றாலும் உற்சாக வரவேற்பு கிடைக்கிறது. மக்கள் மத்தியில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி சொல்லி ஓட்டு கேட்டு வருகிறேன். எனவே, இந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. மற்ற கட்சிகளை விட நாங்க ரேஸ்ல முந்திகிட்டு தான் இருக்கோம்.

2 பாஜ கூட்டணி ‘பிம்பிளிக்கி பிலாபி’ என கருத்து தெரிவித்திருக்கிறீர்கள்? கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இறுதியில் பிஸ்கெட்டாவது கிடைக்குமா? பாஜ கூட்டணி ஒரு சூப்பர் காமெடி கூட்டணியாக அமைந்திருக்கிறது. ஏன் சேர்ந்திருக்கோம், எதுக்குனு தெரியாமலே சேர்ந்த ஒரு கூட்டணியாக உள்ளது. அந்த கூட்டணியில் யாருக்கும் யாருக்குமே சம்பந்தமே இல்லை.

அதுதான் பாஜ கூட்டணி. ஜி.கே.வாசன், அன்புமணி, ஜான் பாண்டியன், சரத்குமார், பச்சமுத்து, சுயேட்சைகள்னு இவங்கள் எல்லாம் மோடி வந்த பிரச்சார மேடையில் இவர்கள் எல்லோரும் வரிசையாக நிற்கும் போது, பாண்டியராஜன் படத்தில் வரும் பிம்பிளிக்கி பிலாபி காமெடி தான் ஞாபகத்துக்கு வருது. தேர்தலுக்கு அப்புறம் என்ன ஆகப்போறாங்கன்னு தெரியல. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு நமுத்து போன பிஸ்கெட் தான் நிச்சயம் கிடைக்கும்.

3 ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் பழுக்குமா?
அது ஏற்கனவே பழுத்த பழம் தான். ஆனா யாரையும் சாப்பிட விடாமல் அவரே வைத்துக் கொள்வார். இறுதியில் அது அழுகித் தான் போகும். அடுத்தவங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. எப்படி இருந்த ஓபிஎஸ்? பாவம்.. பேச்சுவார்த்தை.. பேச்சுவார்த்தைன்னு போயி ஒரு சீட்ட வாங்கி அவரே நிக்கிறாரு. அங்கேயும் 5 ஓ.பன்னீர்செல்வம் நிக்கிறாங்களாம்?. பின்ன எப்படி பலாப்பழம் பழுக்கும்.

4 அதிமுகவை மீட்கும் முயற்சியில் சசிகலா இருப்பதால் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க வரவில்லை என டிடிவி.தினகரன் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுக என்ன குணா குகையிலயா விழுந்துருக்கு, கயிறு கட்டி மீட்க.., தயிர்சாதம் ஏண்டா புளிக்குதுன்னு கேட்டா தமன்னாக்கு தலைவலின்னு சொன்னானாம் என்பது போல உள்ளது.

The post 40 தொகுதிகளிலும் பாஜவுக்கு நமுத்து போன பிஸ்கெட் நிச்சயம் கிடைக்கும்… நடிகை விந்தியா அதிமுக நட்சத்திர பேச்சாளர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vindhya ,AIADMK ,Dinakaran ,
× RELATED பொய் வாக்குறுதி தரும் பாஜவையும்...