கோவை, மார்ச் 31: கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி நடக்கிறது. வாக்கு பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. மாவட்ட அளவில் 3077 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு பணி முடிந்ததும் தடாகம் ரோட்டில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையம், தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகத்திற்குள் உள்ளது. இங்கு வாக்கு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் கருவிகள் வைக்கப்படும். மெசின் வைக்க ஸ்டிராங்க் ரூம் எனப்படும் பிரத்யேக ரூம்கள் தயார் செய்யும் பணி நேற்று துவங்கியது. இந்த அறைகளில் மின் இணைப்பு, காற்றோட்டம் இருக்காது. சிறு துவாரம் கூட இன்றி மொத்தமாக மரப்பலகை வைத்து அடைத்து மெசின்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்த எலக்ட்ரானிக் சிக்னலும் இல்லாமல் இயந்திரங்களை வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாளில் மட்டுமே திறக்கப்படும். மேலும், வாக்கு எண்ணிக்கைக்காக சட்டமன்ற ெதாகுதி வாரியாக கவுண்டிங் சென்டர் அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிக்கு தனித்தனியாக கவுண்டிங் சென்டர் அமைக்கப்படும். இங்கு ஏஜென்டுகள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள், முடிவு அறவிக்கும் பகுதி போன்றவை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவு பெறும். மேலும் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியும் நடக்கிறது.
The post வாக்கு எண்ணிக்கை மையம் தயார் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.