×

தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உட்பட நான்கு வகையான தேர்தல் அதிகாரிகள் இடம் பெற்று இருப்பர். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 19,400 அதிகாரிகள் தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த அதிகாரிகளுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த வாரம் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுதல், வாக்குப்பதிவு விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளாத 1,500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், தேர்தல் பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்கப்படும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner ,Radhakrishnan ,Chennai ,Municipal Commissioner Radhakrishnan ,Dinakaran ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...