பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை: கனிமொழி பேச்சு

கோவை: பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கனிமொழி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்குசேகரித்தார். அப்போது பேசிய கனிமொழி; தேர்தலில் போட்டி திமுக-அதிமுக இடையேதான்.

பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்னைகளை பாஜக ஏற்படுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் என்பதே நடைபெறாது. மோடி அரசு, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையும் வஞ்சித்து வருகிறது. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மணிப்பூர் சம்பவமே உதாரணம். ஜிஎஸ்டி வந்த பிறகு 25 சதவீதம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுகிறது பாஜக. இபிஎஸ் முதலமைச்சரை விமர்சிக்கிறாரே தவிர பிரதமரை பற்றி பேசுவதே கிடையாது. மீண்டும் மோடியிடம் சென்று கைகட்டி நிற்க வேண்டும் என்பதால் இபிஎஸ் பாஜகவை விமர்சிக்கவில்லை இவ்வாறு கூறினார்.

The post பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை: கனிமொழி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: