3வது மனுஷன் காலிலா விழுந்தேன்: சசிகலா காலில் விழுந்தது பற்றி விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி

மதுரை: சசிகலா காலில் விழுந்தது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு, தற்போது தலைவர்கள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவர் சரவணன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழகம் – புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அதிமுக. கூட்டணியில் இருந்தால் விமர்சிக்க மாட்டோம்.

கூட்டணியில் இருந்து விலகி வெளியே வந்தபிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் விமர்சிப்போம். எங்களை நம்பி யார் கூட்டணி வைத்தாலும் கடைசி வரை நாங்கள் விசுவாசமாக இருப்போம். தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள் இருந்தால் கண்டிப்பாக விமர்சிப்போம். செய்தியாளர் கேட்ட பல கேள்விகளுக்கு தன் மீது குற்றம் சுமத்தியர்வர்களிடம் தான் கேட்க வேண்டும் என பிரச்சாரத்தின்போது மோடி, ஒன்றிய அரசை விமர்சனம் செய்யாதது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்தார். ஜனநாயக நாட்டில் எல்லோரும் சமம், யார் வேண்டுமானலும் தேர்தலில் நிற்கலாம்.

தகுதி இருப்பதால்தான் ராமநாதபுரத்தில் 5 பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர். எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது நான் எடுத்த முடிவு அல்ல, 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; யார் களமிறங்கினாலும் ஒட்டு மக்கள்தான் போட வேண்டும் என தமிழ்நாட்டில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் நிற்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். “பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே. நான் என்ன 3வது மனுஷன் காலிலா விழுந்தேன்..? என சசிகலா காலில் விழுந்தது குறித்து விளக்கம் அளித்தார்.

The post 3வது மனுஷன் காலிலா விழுந்தேன்: சசிகலா காலில் விழுந்தது பற்றி விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: