பாஜவுடன் கூட்டணி வைத்ததால் சமூக நீதிக்கு எதிராக மாறிய பாமக: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்திபவனில் நேற்று அளித்த பேட்டி: தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனையும், தெலங்கானா, புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள். ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமனையும் ஏன் தேர்தலில் போட்டியிட வைக்கவில்லை. இதற்கான உண்மையான காரணத்தை பாஜ தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சமூக பாதுகாப்பு அளிக்கப்படும். வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய பாஜ அரசு மறுக்கிறது.

ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தியும், சமூக நீதி பற்றி பேசியும் வரும் பாமக தற்போது பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அந்தக் கட்சி சமூக நீதிக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது. எங்கள் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

The post பாஜவுடன் கூட்டணி வைத்ததால் சமூக நீதிக்கு எதிராக மாறிய பாமக: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: