×

மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு திமுக தரப்பு எதிர்ப்பு

சென்னை: மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தென் சென்னை மக்களவை தொகுதியில் தாக்கலான வேட்பு மனுக்கள் மீது பரீசிலனை நடைபெற்றது.

அப்போது; மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது;. வினோஜ் பி செல்வம் வேட்புமனுவில் முழு விவரங்களையும் தெரிவிக்கவில்லை என திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கபப்ட்டுள்ளது. வினோஜ் பி செல்வம் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு திமுக தரப்பு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Madhya Pradesh ,BJP ,Vinoj P Selvam ,CHENNAI ,Central Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ...