தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது

 

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இதன்மூலம் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். 30ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் தாக்கலான வேட்புமனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: