சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை

கோவை, மார்ச் 28: கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சிறை மெகா அதாலத் நீதிமன்றம் நேற்று கோவை மத்திய சிறையில் நடைபெற்றது. இதில் இந்த 4 மாவட்ட நீதிமன்ற பகுதிக்குட்பட்ட சமரசம் செய்யக்கூடிய சிறு குற்றங்களில் தொடர்புடைய சிறைவாசிகளின் குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சிவா சிறை அதாலத்தை துவக்கி வைத்தார். கோவை மத்திய சிறை எஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கோவை மாவட்டத்தில் சிறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 சிறை வாசிகளின் 21 வழக்குகளுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 3 சிறைவாசிகளின் 3 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 சிறைவாசிகளின் 24 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு கோவையை சேர்ந்த 13 கைதிகள் மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 கைதிகள் என 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் பொருட்டு விடுவிக்கப்படவில்லை.

The post சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: