பாஜவுடன் கூட்டணி வைத்ததால் அதிர்ச்சி அமமுக பொதுக்குழு உறுப்பினர் கட்சியிலிருந்து திடீர் விலகல்

புழல்: பாஜவுடன் கூட்டணி வைத்ததால் அதிர்ச்சி அடைந்த அமமுக பொதுக்குழு உறுப்பினர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக, தேமுதிக ஒரு அணியாகவும், பாஜ, பாமக, அமமுக, தமாகா ஆகியவை ஒரு அணியாகவும் என தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பாமக, பாஜ, அமமுக, தமாகா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதை விரும்பாத தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி வருகின்றனர். அதன்படி அமமுக பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த அமமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்குன்றம் கே.அந்தோணி, நேற்று பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், கட்சியிலிருந்தும் விலக்கிக் கொள்கிறேன் என்று திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் வேதாசலத்திற்கு கடிதம் அனுப்பினார்.

அமமுகவில் இருந்து விலகிய அந்தோணி புழல் ஊராட்சி ஒன்றியம், செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரைபட்டு ஊராட்சி மன்ற தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். மேலும், செங்குன்றத்தில் உள்ள சைதை தாலுகா கூட்டுறவு சங்கத்தில் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து தொடர்ந்து அதிமுகவில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத்தொடர்ந்து, புழல் சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள அமமுகவைச் சேர்ந்த சிலர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

The post பாஜவுடன் கூட்டணி வைத்ததால் அதிர்ச்சி அமமுக பொதுக்குழு உறுப்பினர் கட்சியிலிருந்து திடீர் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: