ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி

சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் உள்ள லஸ் சர்ச் சாலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை, அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் முன்னிலையில், ெதாகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா திறந்து வைத்தார். பணிமனையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் நாடாளுமன்ற உறுப்பினராக (2014-2019) இருந்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் வலியிறுத்தி தி.நகர் தொகுதியில் பூங்கா, நடைபாதை என பல்வேறு வளர்ச்சி பணிகள் கொண்டு வந்தேன். இதற்காக, முனைப்பாக செயல்பட்டு நிதி பெறப்பட்டது. மத்திய மேம்பாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது செயல்படுத்தினேன்.

தென் சென்னை தொகுதிக்கு மேலும் பல வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் பொறுப்பாளர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் வி.என்.ரவி, எம்.கே.அசோக், தி.நகர் சத்யா கேபி.கந்தன், கூட்டணி கட்சிகளான தேமுதிக மாவட்ட செயலாளர் பழனி மற்றும் ஆனந்தன் புதிய தமிழகம் எஸ்.டி.பி.ஐ, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

The post ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: