எண்ணி முடிக்கவே 2 மணிநேரமாச்சு…சுயேச்சையின் சில்லரையால் மற்ற வேட்பாளர்கள் தவிப்பு

சென்னை: பெரும்புதூர் ெதாகுதியில் சுயேச்சை வேட்பாளராக அகில இந்திய தேர்தல் சீர்திருத்த கூட்டமைப்பு சார்பில் ஜெயக்குமார் ேவட்பு மனு தாக்கல் செய்தார். இவர் சில்லரை காசுகளை கொண்டு வந்ததால் எண்ணி முடிக்கவே 2 மணிநேரம் ஆகிவிட்டது. இதனால் மற்ற வேட்பாளர்கள் நீண்ட நேரம் தவித்தனர். ஆவடியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அகில இந்திய தேர்தல் சீர்திருத்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். பரந்தூர் விமான நிலையத்திற்காக 40 கிராமங்களை அழித்து விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இந்த பாதக செயலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அமைப்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறது. பரந்தூர் விமான நிலையத்திட்டம் இந்தியாவிற்கு சொந்தமானதா என்றால் அதுவுமில்லை. யாரோ ஒரு கார்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து தருவதற்காக பரந்தூரை சுற்றியுள்ள நாற்பது கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி ஏழை விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது. தற்போது தேர்தல் ஆணையம் ஊழல்வாதிகளுக்கு உதவிடும் வகையில் லைசென்ஸ் தரும் நிறுவனமாக மாறிவிட்டது.

இதனால் கார்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளின் நிலங்களை தாரை வார்த்து வரும் ஊழல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கான மனுதாக்கல் செய்ய ஒரு தாம்பாளத்தில் ரூ.25ஆயிரத்திற்கான ரூ.10 மற்றும் ரூ.5 சில்லரை காசுகளை கையில் ஏந்தியவாறு எடுத்து வந்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். சில்லரை காசுகளை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் இரண்டு மணி நேரம் போராடி எண்ணி முடித்தனர். இதனால் மற்ற வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய கால தாமதம் ஏற்பட்டது.

The post எண்ணி முடிக்கவே 2 மணிநேரமாச்சு…சுயேச்சையின் சில்லரையால் மற்ற வேட்பாளர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: