அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் பாஜவினர் மீது வழக்கு

 

வேளச்சேரி, மார்ச் 25: வேளச்சேரியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்ததாக பாஜவினர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலங்கானா ஆளுநராகவும், புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சவுந்தரராஜன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த 18ம் தேதி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து, தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளச்சேரியில் பாஜ சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. தொடர்ந்து தேர்தல் அலுவலகம் திறந்துள்ளனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக, வேளச்சேரி காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்தனர். அதன்பேரில் பாஜ வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாபு உள்ளிட்ட சிலர் மீது வேளச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் பாஜவினர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: