நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாளை திருச்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் இக் கூட்டணியின் 40 வேட்பாளர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இதை தொடர்ந்து 25ம் தேதி (நாளை மறுதினம்) அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களும் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூருக்கு செங்கோட்டையன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்சென்னைக்கு கோகுல இந்திரா தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதிக்கு தமிழ் மகன் உசேன், விழுப்புரம், கடலூர், புதுச்சேரிக்கு சி.வி.சண்முகம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி, ராமநாதபுரம் ஆர்.பி.உதயகுமார், விருதுநகர் – ராஜேந்திர பாலாஜி, தூத்துக்குடி கடம்பூர் ராஜூ தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குமரி – தளவாய் சுந்தரம், நெல்லை – இசக்கி சுப்பையா, தென்காசி -ராஜலெட்சுமி தேர்தல் பணிக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: