அண்ணா சாலை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உரிய ஆவணம் இல்லாத ரூ.3.68 லட்சம் பறிமுதல்

சென்னை: வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே, நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சாந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவரிடம் ரூ.2.60 லட்சம் இருந்தது. ஆனால், அதற்கு உரிய ஆவணம் ஏதும் இல்லை. விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பாகிராத் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார், பறக்கும் படை அதிகாரி பூபேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படையினர், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் வைக்கப்படும், உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று பாகிராத்திடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் ஆவணமின்றி அதிகளவு பணத்தை எடுத்துச் சென்றால் பறக்கும் படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டை பகுதியில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சம்பவம்: அண்ணாசாலை மன்ேறா சிலை அருகே நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்த போது, டெல்லி ஈஸ்ட் ஷாலிமோர் பாக் பகுதியை சேர்ந்த மணீஷ் குப்தா (49) என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.08 லட்சம் எடுத்து சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

The post அண்ணா சாலை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உரிய ஆவணம் இல்லாத ரூ.3.68 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: