டெல்லி கலால் கொள்கையில் கெஜ்ரிவால், சிசோடியாவுடன் கவிதா கூட்டுச் சதி செய்தார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி புதிய கலால் கொள்கை தொடர்பான வழக்கில் துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய்சிங் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கவிதா கைது குறித்து அமலாக்கத்துறை கூறுகையில்,’பிஆர்எஸ் தலைவர் கவிதா டெல்லி கலால் கொள்கையில் ஆதாயம் பெற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்தார். பெற்ற சலுகைகளுக்கு ஈடாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ. 100 கோடி கொடுத்தார்’ என்றுகுற்றம் சாட்டி உள்ளது. இதற்கிடையே தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

The post டெல்லி கலால் கொள்கையில் கெஜ்ரிவால், சிசோடியாவுடன் கவிதா கூட்டுச் சதி செய்தார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: