தெலங்கானாவில் ஆளுங்கட்சிக்கு தாவிய பிஆர்எஸ் எம்எல்ஏ, எம்பி: சந்திரசேகர ராவ் அதிர்ச்சி

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் கடந்த நவம்பாில் 119 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 65 இடங்களிலும், பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த செவல்லா தொகுதி எம்பி ரஞ்சித், கைராதபாத் தொகுதி எம்எல்ஏ தானம் நாகேந்தர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வர் ரேவந்த்ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். அப்போது தெலங்கானா காங்கிரஸ் விவகார பொறுப்பாளர் தீபாதாஸ் உடனிருந்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

* நான் யாருன்னு இனிமேதான் தெரியும் ரேவந்த்ரெட்டி
‘தெலங்கானா முதல்வராக ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பணி புரிந்து வருகின்றேன். தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதால் இனி காங்கிரஸ் தலைவரான நான் யாரு, எனது நடவடிக்கை என்ன என்பது எதிர்கட்சியினருக்கு இதன் பிறகு தான் தெரியும்’ என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறி உள்ளார்.

The post தெலங்கானாவில் ஆளுங்கட்சிக்கு தாவிய பிஆர்எஸ் எம்எல்ஏ, எம்பி: சந்திரசேகர ராவ் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: