பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.. பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்காது: வைகோ பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவது என இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட மதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வைகோ அறிவித்தார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி: வைகோ
மதிமுக சார்பில் துரை வைகோ எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம்; பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். புதிய சின்னம் கிடைத்தாலும் பாதகம் இல்லை; மக்களிடம் எளிதாக கொண்டு செல்வோம். பிரதமர் மோடி இன்னும் எத்தனை முறை வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்காது. மோடி சொல்லும் எனது குடும்பம் என்பது அவரது கட்சியில் சேரும் சமூக விரோதிகளையே குறிக்கும் என்று வைகோ கூறினார்.

The post பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.. பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்காது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: