தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். தேர்தல் ஆணைய விதிப்படி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து, 10 நாட்களுக்கு முன் வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதன்படி மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால, அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 6.18 வாக்காகளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு டிச.9-ம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று வரை பெறப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும். இவர்கள் பெயர்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டைகள் அவர்களுக்கு கிடைக்கப்படவில்லை என்றால் அவர்கள் அதை தவிர்ந்து ஆதார் உள்ளிட்ட 11 ஆவணங்கள் காண்பித்து தங்களது வாக்கினை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தலுக்கு பின் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: