மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல்!

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேச தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு முடிவு செய்துள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: