663 நாட்களுக்குப் பிறகு விலையில் மாற்றம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 8ம் தேதி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் இதுவரை ரூ.918க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தவிலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.102.63க்கு விற்கப்பட்டது. இன்று காலை முதல் 100.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.2 குறைத்து ரூ.92.34க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post 663 நாட்களுக்குப் பிறகு விலையில் மாற்றம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Related Stories: