பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் காங்கிரஸ் சார்பில் டேனிஷ் அலி போட்டி? சோனியா காந்தியுடன் சந்திப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அதானி குழும மோசடி குறித்து கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ண நகர் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார். மஹூவா மொய்த்ரா நீக்கப்பட்டதை கண்டித்து மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அம்ரோஹா தொகுதி உறுப்பினர் டேனிஷ் அலி கழுத்தில் பதாகை அணிந்து கோஷம் எழுப்பினார்.

இதையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக டேனிஷ் அலி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.  தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தகவல்கள் வந்தாலும் அது உறுதி செய்யப்படவில்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மணிப்பூரில் தொடங்கிய போது அதில் கலந்து கொண்ட டேனிஷ் அலி, உத்தரபிரதேசத்தில் தனது அம்ரோஹா தொகுதி வழியே ராகுலின் நீதி யாத்திரை சென்றபோது அதிலும் டேனிஷ் அலி கலந்து கொண்டார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் டேனிஷ் அலி சந்தித்து பேசினார். இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டேனிஷ் அலி மீண்டும் அம்ரோஹா தொகுதியில் போட்டியிடுவார் என செய்திகள் வௌியாகி உள்ளன.

The post பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் காங்கிரஸ் சார்பில் டேனிஷ் அலி போட்டி? சோனியா காந்தியுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: