மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலையை பாஜ நிறுத்தி விடும்: நவாஸ்கனி எம்பி எச்சரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் அமைப்பு சார்பில் அகில இந்திய பெண்கள் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இதில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கலந்து கொண்டார். விழாவில் நவாஸ்கனி எம்பி பேசியதாவது: பெண்கள் சிரமப்படுவதால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது பாஜ ஆட்சி மூன்று, நான்கு மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்து வருகிறது. காங்கிரஸ் கொண்டு வந்த இந்த பெண்களுக்கான திட்டத்தை படிப்படியாக நிறுத்த வேண்டும். மூடவேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சி செயல்படுகிறது.

மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்படும். சென்னை மற்றும் தென் மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியபோது, ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஏமாற்றிய ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். மகளிர் உதவித்தொகை, பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என பெண்களுக்காக செயல்படும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

The post மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலையை பாஜ நிறுத்தி விடும்: நவாஸ்கனி எம்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: