கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பகுதியில் வட மாநில இளைஞர்களை தாக்கி செல்போன்கள் பறிப்பு: 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பகுதியில் வட மாநில இளைஞர்களை கத்தியால் வெட்டி விட்டு மூன்று செல்போன்களை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரும்பாலான மின் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் இரும்பு உருக்காலைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ்(22), விக்கி(23), அவினாஷ் குமார்(32) ஆகியோர் தனியார் தொழிற்சாலை வேலை முடித்துவிட்டு நேற்று இரவு 11 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மூன்று மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வடமாநில இளைஞரை மடக்கி பணம் செல் போன் கொடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். ஆனால் வடமாநில இளைஞர்கள் செல்போனை கொடுக்க மறுத்துள்ளபோது மேற்கண்ட மர்ம நபர்கள் அவர்களை தலை, கைகளை வெட்டிவிட்டு செல்போன்களை பறித்து சென்றனர்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சேர்ந்த தம்ரெட்டிப்பாளையம் கார்த்திக்(24), ராஜபாளையம் அபினேஷ்(22), மங்காவரம் சந்தோஷ்(24) ஆகியோரை கும்மிடிப்பூண்டியின் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த விசாரணையில் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பகுதியில் வட மாநில இளைஞர்களை தாக்கி செல்போன்கள் பறிப்பு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: