ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரத்தில் வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு

புதுடெல்லி: ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரத்தில் வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில் 45 நாட்கள் தாமதம் ஆனது. இதற்காக ரூ.210 கோடி அபராதம் விதித்ததோடு கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித் துறை சமீபத்தில் முடக்கியது. வங்கிக் கணக்கில் ரூ.115 கோடி இருப்பு இருக்க வேண்டும் என்றும், அதுபோக மீதுமுள்ள தொகை மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

வருமான வரித் துறையின் முடக்கத்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. இந்தச் சூழலில் காங்கிரசின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.65 கோடி வருமான வரித் துறை பிடித்தம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் வருமான வரித்துறை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

The post ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரத்தில் வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: