மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிசெய்கிறது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல்லியின் ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மாத கால போராட்டத்தை நடத்தினர். உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்தப் போராட்டத்திற்குப் பின் இச்சட்டம் அமல்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில், இந்தியாவில் அமலாகும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியர்கள் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. அண்டை நாட்டை சேர்ந்த சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா அமல்படுத்துகிறது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

The post மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: