நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவிப்பு

 

டெல்லி: சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை ஒன்றிய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சிஏஏ சட்ட அறிவிக்கையை வெளியிட்டது பல ஐயங்களை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்கள், இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் வகை செய்யப்படாததற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் வகை செய்யப்படவில்லை. இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ வகை செய்கிறது. 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ. சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: