நாட்டியாஞ்சலி நடைபெறவிடாமல் தடுத்தது யார்?.. வதந்தி பரப்பிய அண்ணாமலை.. வெளியான உண்மை!!

சென்னை : தஞ்சை பெருவுடையார் கோயிலில் சிவராத்திரி அன்று, நாட்டியாஞ்சலி விழா நடத்த ஒன்றிய அரசின் இந்திய தொல்லியல் துறை (ASI) அனுமதி மறுத்த நிலையில், அவ்விழாவை நடத்த தமிழ்நாடு அரசுதான் அனுமதி மறுத்தது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வதந்தி பரப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, திமுக அரசு அனுமதி மறுத்ததால், விழா ரத்து செய்யப்பட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில்

“நாட்டியாஞ்சலி ரத்து : தமிழ்நாடு அரசுக்கு தொடர்பில்லை

வதந்தி

‘தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த அனுமதி மறுத்தது திமுக அரசு’ என்று பாஜ தலைவர் திரு அண்ணாமனை குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மை என்ன ?

1. நாட்டியாஞ்சலி விழாவை தமிழ்நாடு அரசு இரத்து செய்யவில்லை.

2.நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை தான்.

3. தஞ்சை பெருவுடையார் சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தொல்வியல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகையால்தான் 20 ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறவில்லை

எனவே, அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல!” என்று உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் கொடுத்துள்ளது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டது.

The post நாட்டியாஞ்சலி நடைபெறவிடாமல் தடுத்தது யார்?.. வதந்தி பரப்பிய அண்ணாமலை.. வெளியான உண்மை!! appeared first on Dinakaran.

Related Stories: