மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார்..!!

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் வீடு திரும்பியுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் சிறிய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் தற்போது அஜித்குமார் நடித்து வருகிறார். காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பு வீக்கம் அடைந்ததால் நடிகர் அஜித்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நரம்பு வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று இரவே சாதாரண வார்டுக்கு அஜித் மாற்றப்பட்டார்.

The post மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார்..!! appeared first on Dinakaran.

Related Stories: