பென்ன தோசை

தேவையான பொருட்கள்

1 கப் இட்லி அரிசி
1/4 கப் உளுந்தம்பருப்பு
1.5 கப் அவல் பொரி
1/2 டீஸ்பூன் வெந்தயம்
1 டீஸ்பூன் சர்க்கரை
உப்பு தேவையான அளவு

செய்முறை

இட்லி அரிசி, உளுந்தம்பருப்பு, பொரி, வெந்தயத்தை தனித்தனியாக நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு, அவற்றை 3 கப் தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு, அதனை மொத்தமாக அரைத்துக் கொள்ளவும். அதாவது இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு, அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து 6 மணி நேரம் அசைக்காமல் புளிக்க விடவும். நன்றாக புளித்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கனமான தோசையாக ஊற்றி எடுத்தால் கர்நாடகா ஸ்டைல் பென்ன தோசை தயார். இந்த சுவையான, மிருதுவான பென்ன தோசைக்கு தேங்காய் சட்னி, மிளகாய்ப் பொடி சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

The post பென்ன தோசை appeared first on Dinakaran.